For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின் வாங்கிய மத்திய அரசு.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த திட்டமில்லை.. உச்ச நீதிமன்றத்தில் தகவல்

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த வைத்திருந்த திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் திட்டமில்லை - மத்திய அரசு- வீடியோ

    டெல்லி: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த வைத்திருந்த திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. மக்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பயன்பாட்டை கண்காணிக்க போவதாக கூறியது.

    சமூக வலைதளங்களில் வரும் தேசத்திற்கு எதிரான போஸ்டுகளையும், அரசுக்கு எதிரான போஸ்டுகளையும் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் தற்போது திடீர் என்று மத்திய அரசு பின்வாங்கி இருக்கிறது.

    சிறப்பு குழு

    சிறப்பு குழு

    இதற்காக தனியார் நிறுவனங்களின் உதவியை நாட முடிவெடுத்தது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கண்காணிப்பில் இந்த தனியார் நிறுவனம் செயல்படும் என்று கூறப்பட்டது. இதற்காக சிறைப்பட்டு குழு உருவாக்கப்படும் என்றது. இதன் மூலம் மக்கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பேசும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். நெட்டிசன்கள் இந்த முடிவிற்கு எதிராக கொந்தளித்தனர். முக்கியமாக இது மக்களின் பேச்சுரிமையை பாழாக்கும் என்றும் கூறினார். ஆனால் மத்திய அரசு அதை செவி கொடுத்து கேட்கவில்லை.

    எதிர்

    எதிர்

    இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்து இருந்தது. சமூக வலைத்தளங்களை மத்திய அரசு முடக்க பார்க்கிறது என்று மனுவில் கூறி இருந்தது. ஆனால் இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படவில்லை. அதன்படி ஒரு மாதத்திற்கு பின் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

    பின் வாங்கிய மத்திய அரசு

    பின் வாங்கிய மத்திய அரசு

    இந்தநிலையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் திடீர் என்று பின்வாங்கி இருக்கிறது. இதில் இன்னும் சரியான கொள்கையை வரையறுக்கவில்லை என்று கூறியுள்ளது. அதனால் இப்போதைக்கு சமூக வலைத்தளத்தை கண்காணிக்கும் குழுவை உருவாக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.

    English summary
    No social media hub, Govt tells SC as it withdraws notification. The central government decides not to control social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X