For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தேர்தல் கட்டுப்பாடு ஆரம்பம்.. சித்தராமையாவின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தூக்கிய ப்ளே ஸ்டோர்!

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Now, Siddaramaiahs app goes missing from Play Store

இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்து இருக்கிறது. இதனால் அரசு சார்ந்த வளர்ச்சி திட்ட விளம்பரங்களை வெளியிடும் அரசு பக்கங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சித்தராமையாவின் பெயரில் செயல்பட்டு வந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

மோடி அப்ளிகேஷன் மக்களின் தகவலை தவறாக திருடியதாக ஜெர்மனை சேர்ந்த எலியாட் ஆண்டர்சன் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். பின் சில நாளில் , காங்கிரஸ் அப்ளிகேஷன் மீதும் பாஜக கட்சி இந்த குற்றச்சாட்டை வைத்தது.

இதனால் காங்கிரஸ் கட்சியின் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது, மோடி ஆப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் சித்தராமையா ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

English summary
Karnataka Chief Minister Siddaramaiah's app has conspicuously gone missing from the Google Play Store. This comes days after Congress deleted its official app 'With INC' from the Google Play Store, making it unavailable for Android users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X