நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநில எம்.பி ஏ.வி.சாமி திடீர் மயக்கம் : மருத்துவர்கள் பரிசோதனை
நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநில எம்.பி ஏ.வி.சாமி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஏ.வி.சாமி திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இவரை மருத்துவக்குழுவினர் பரிசோதித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஏ.வி சாமி. இவருக்கு வயது 88. மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,ஆக பதவி வகித்து வரும் இவர், ஒடிசா மாநில பழங்குடி மக்களின் நல்வாழ்விற்கான பல பணிகள் ஆற்றி உள்ளார்.

வழக்கம்போல இன்று ராஜ்யசபா கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த, எம்.பி ஏ.வி.சாமி நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மயக்கமடைந்த சாமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்துவருவதாக துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications