For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருடன் இருக்கும் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்திய பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

By Siva
Google Oneindia Tamil News

பலசூர்: ஒடிஷாவில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிஷா மாநிலம் பலசூர் மாவட்டம் ஊபதா பிளாக்கில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கமலகந்தா தாஸ் கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு பள்ளியில் நடந்த ஆசிரியர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அந்த முகாமிற்கு வந்த ஆசிரியர் ஒருவர் தாஸிடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

Odisha school headmaster suspended for Vajpayee condolence

அது உண்மையா என்பதைக் கூட விசாரிக்காமல் தாஸ் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். உயிருடன் இருக்கும் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்திய தாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் சனதான் மாலிக்கிடம் புகார் அளித்தனர்.

மாலிக் இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தி அறிக்கையை மாலிக்கிடம் அளித்தார். இதையடுத்து மாலிக் தாஸை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதற்கிடையே கமலகந்தா தாஸ் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

English summary
Odisha government today suspended a school headmaster for conducting a condolence meeting for former Prime Minister Atal Bihari Vajpayee based on false information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X