For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த 2 விஷயங்களும் கவலையளிக்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை பொளேர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    2018 பட்ஜெட் முக்கிய வரிகள் என்ன தெரியுமா ?

    டெல்லி: எரிபொருள் விலையேற்றம் கவலைப்படத்தக்கது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஓராண்டாக நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குவது பொருளாதார ஆய்வறிக்கை. இன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தொழில்துறை வளர்ச்சி

    தொழில்துறை வளர்ச்சி

    தொழில்துறை வளர்ச்சி 4.4 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2வது அரையாண்டில் பொருளாதார வேகம் அதிகரித்துள்ளது. வங்கிகளுக்கு ஊக்கம் வழங்கியது, அன்னிய நேரடி முதலீட்டில் தாராளமயம், ஜிஎஸ்டி அறிமுகம் போன்றவை இதற்கு காரணம்.

    கவலையளிக்கும் விஷயம்

    கவலையளிக்கும் விஷயம்

    எரிபொருள் விலையேற்றம் கவலையளிக்கிறது. வேலைவாய்ப்பு என்பது மற்றொரு கவலையளிக்க கூடிய விஷயம். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பட்ஜெட்டில், எரிபொருள் மீதான வரி குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகம் டாப்

    தமிழகம் டாப்

    நாட்டின் 70 சதவீத ஏற்றுமதி, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து செய்யப்படுகிறது என்று, பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஏற்றுமதிக்கு உகந்த நாடாக இந்தியா மாறியுள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டில் தாக்கம்

    பட்ஜெட்டில் தாக்கம்

    பொருளாதார ஆய்வறிக்கை அடிப்படையில் அரசால் பல கொள்கைகள் வகுக்கப்படும். எனவே இந்த பொருளாதார ஆய்வறிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது. பட்ஜெட்டில் இதன் தாக்கம் இருக்குமா என்பது பிப்ரவரி 1ம் தேதி தெரியவந்துவிடும்.

    English summary
    Economy accelerated in second half of current fiscal due to GST, bank recapitalisation, liberalisation of FDI and higher exports, says Economic Survey. Oil prices a major concern, says Economic Survey tabled in Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X