For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ஆண்டுகளில் 1061 கற்பழிப்பு வழக்குகள்: இது கர்நாடக கணக்கு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 1000க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் கணக்கெடுப்புத் தகவலின்படி கடந்த 3 ஆண்டுகளில் 1061 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் 563 சிறுமிகள் மீதான வன்முறை வழக்குகளும் அடக்கம். மேலும், இந்தக் குற்றங்கள் 2013ஆம் ஆண்டுதான் அதிகமாகும்.

26 குற்றவாளிகள் கைது:

26 குற்றவாளிகள் கைது:

இத்தனை வழக்குகள் பதிவான போதிலும், மொத்தமாக 26 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வருட முதல் பாதியில் எந்த பாலியல் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அமைச்சகம் வெளியீடு:

போலீஸ் அமைச்சகம் வெளியீடு:

இந்த அதிர்ச்சிகரமான தகவல்களானது அம்மாநில உள்துறை அமைச்சரான கே. ஜே. ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டின் முதல்பாதி தகவலின்படி 476 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 325 வழக்குகள் சின்னஞ்சிறுமிகள் மீதான வழக்குகள் ஆகும்.

சிறுவர்கள் மீதான வழக்குகள்:

சிறுவர்கள் மீதான வழக்குகள்:

இந்தாண்டின் இரண்டாம் பாதியைப் பொறுத்தமட்டில் சிறுமியர்கள் மீதான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.

10 விரைவு நீதிமன்றங்கள்:

10 விரைவு நீதிமன்றங்கள்:

இதுபற்றி முதல்வர் சி்த்தராமையா கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையில் 10 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. மாநில உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு பின்னர் இத்திட்டமானது நடைமுறைப்படு்த்தப்படும் என தெரிவித்தார்.

குண்டர் சட்டம்:

குண்டர் சட்டம்:

மேலும், இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The state reported 1,061 cases of rapes in 2013 the maximum in the last three years. This includes 563 cases of rape on minors. However, only 26 persons were convicted of rape last year. And the number of rape accused convicted in the first half of this year is zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X