தீவிரவாதிகள் குறித்து ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது.. நிர்மலா சீதாராமன் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: தீவிரவாதிகள் குறித்து இந்திய அரசு ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது என நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்து இருக்கிறார்.

காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று முதல்நாள் அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

Pak is always irresponsible to our evidences says Nirmala Sitharaman

இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர்.

இதுகுறித்து தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். அதில் ''ஜெய்ஷ்-இ-முகமது என்று தீவிரவாத அமைப்பின் உதவியுடன்தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் இதற்கு காரணம்.'' என்றார்.

மேலும் ''ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அசார்மசூத் இதில் பின்புலமாக இருந்தார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் தாக்குதலுக்கான ஆதாரங்களை அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது'' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Defence Minister Nirmala Sitharaman says that ''Giving the evidences to Pak will be a continuous process. It will have to be proved over and over again that they are responsible. Pakistan will have to pay for this misadventure'' about Kashmir terror attack.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற