முகவரி அடையாளத்திற்கு இனி பாஸ்போர்ட் செல்லாது- வெளியுறவுத்துறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஸ்போர்ட் இனி முகவரி அடையாளத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் உரியவரின் பெயர், தந்தை மற்றும் தாயின் பெயரோடு முகவரியும் அச்சிடப்பட்டு வந்தது.

Passport will not be soon accepted as Address proof

இவ்வாறு அச்சிடப்பட்டு வந்த முகவரியை கொண்டு பல முறைகேடுகளும், போலி பாஸ்போர்டுகளும் தயாரிக்கப்படுவதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, மூன்று நபர் குழு இந்த முடிவை பரிந்துரைத்ததாகவும், இதனை வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் இனி அந்த கடைசி பக்கம் கொண்டபடி பாஸ்போர்ட் அச்சிடப்படாது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த புதுவகையான பாஸ்போர்டுகள் அனைத்தும் நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்தில் அடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Passport will not be soon accepted as Address proof says, Foreign ministry. And also it added that last page which contains the address will not be printed in future

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற