பாஸ்போர்ட்டிலும் இந்தியை திணித்தது மத்திய அரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து பாஸ்போர்ட்களிலும் இனி ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். மேலும் 8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் சலுகையையும் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

1967ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார்.

Passports will now be in both Hindi and English: Sushma Swaraj

அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அனைத்து பாஸ்போர்ட்களிலும் இனி ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தியும் இடம் பெறும் என அவர் அறிவித்தார்.

இதுவரை பாஸ்போர்ட்களில் பர்சனல் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தது. இனி அப்படி இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் 8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
External affairs minister Sushma Swaraj announced on Friday that passports will now be in both Hindi and English, and not just in English.She also announced 10 per cent reduction in passport fee for applicants who are under eight and over 60 years of age.
Please Wait while comments are loading...