குஜராத் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப பட்டேல் சமூகத்தினர் வாக்களிக்க வேண்டும்: ஹர்திக் பட்டேல் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்ப வாக்களிக்க வேண்டும் என பட்டேல் சமூகத் தலைவ ஹர்திக் பட்டேல் அதிரடியாக அறிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. காங்கிரஸ் கட்சியோ எப்படியாவது அரியணை ஏற வேண்டும் என வியூகம் வகுத்து செயல்படுகிறது.

குஜராத் தேர்தலைப் பொறுத்தவரையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விவகாரத்துடன் பட்டேல்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சனையும் முக்கியமான ஒன்றாகி இருக்கிறது. பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலுடன் இருந்த சிலரை பாஜக வளைத்துப் போட்டிருக்கிறது.

ராகுல் ஹர்திக் சந்திப்பு

ராகுல் ஹர்திக் சந்திப்பு

ஆனால் ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குதான் ஹர்திக் பட்டேல் ஆதரவு தருவார் என கூறப்பட்டது.

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்

இந்நிலையில் என்.டி.டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பவே பட்டேல் சமூகத்தினர் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஹர்திக் பட்டேல் கூறியுள்ளதாவது:

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

என்னுடைய சமூகத்தினரிடம் பாஜக அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றும் வகையில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். பாஜகவின் வீழ்ச்சியை எங்களுடைய பட்டேல் சமூகம் ஆதரிக்கும்.

மக்கள் வாக்களிப்பார்கள்

மக்கள் வாக்களிப்பார்கள்

மக்கள் புத்திசாலினமானவர்கள். பாஜகவை அகற்றத்தான் வாக்களிக்க வேண்டும் என கூறியிருப்பதில் இருந்தே அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை புரிந்தும் இருப்பார்கள்.

உண்மையான தலைவர்கள் அல்ல

உண்மையான தலைவர்கள் அல்ல

பாஜகவுடன் கை கோர்த்திருப்பவர்கள் உண்மையான பட்டேல் சமூகத் தலைவர்கள் அல்ல. எங்களுடைய இடஒதுக்கீட்டு கோரிக்கையை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக ஏற்காமல் துரோகம் செய்துவிட்டது. இவ்வாறு ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.

வாக்கு வங்கி அவுட்

வாக்கு வங்கி அவுட்

குஜராத்தில் பாஜகவின் வாக்கு வங்கியாக பட்டேல் சமூகத்தினர் இருந்து வந்தனர். ஆனால் தற்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு மீது பட்டேல் சமூகம் கடும் கோபத்தில் இருக்கிறது. ஹர்திக் பட்டேல் பகிரங்கமாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளது அக்கட்சியினரை அதிரவைத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hardik Patel has said, I have been telling my community that they have to vote the BJP out of power in Guajarat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற