பாட்னா- மொகாமா விரைவு ரயிலில் தீ விபத்து... உயிர்சேதம் தவிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் பாட்னா- மொகாமா பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

பீகாரில் உள்ள பாட்னா- மொகாமா பயணிகள் விரைவு ரயில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் ஆகும். 4 மணி நேரத்தில் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த ரயிலை மக்கள் பலர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Patna-Mokama passenger train gutted

இந்த நிலையில் இன்று அதிகாலை பாட்னா- மொகாமா பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ரயிலில் ஒரு பெட்டியில் மட்டுமே முதலில் தீ உருவாகி இருக்கிறது.

பின் ரயிலின் 4 பெட்டிகளில் தீ வேகமாக பரவியுள்ளது. ஆனால் அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Patna-Mokama passenger train gutted in Bihar. Railway department confirms that there was no casualties in the incident.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற