For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிளகுத் தூளை சாதாரணமா நினைக்காதீங்க.. நிலைகுலைய வைத்து விடுமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மிளகுத் தூளை சாதாரணமாக எடுக்க முடியாது. அது ஒரு மனிதனை நிலை குலைய வைத்து ஸ்தம்பிக்க வைத்து விடும். ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் அதைக் கடுமையாக்கி உயிருக்கே ஆபத்தாக்கி விடும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

நேற்று லோக்சபாவில் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மிளகுத் தூளைத் தூவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. வரலாறு காணாத வன்முறைக் களமாக நேற்று லோக்சபாவை மாற்றி விட்டனர் ஆந்திராவைச் சேர்ந்த எம்.பிக்கள்.

உண்மையில் இந்த மிளகுத் தூள் அபாயகரமானதாகும். கிட்டத்தட்ட ஒரு ஆயுதத்திற்குச் சமமானதாம் இது. அவ்வளவு டேஞ்சரானது என்கிறார்கள் டாக்டர்கள்.

கண் தெரியாது

கண் தெரியாது

மிளகுத் தூள் கண்ணில் பட்டால் சிறிது நேரத்திற்கு கண் தெரியாமல் போய் விடும். சுத்தமாக எதையுமே பார்க்க முடியாது.

இருமித் தள்ளி விடுவார்கள்

இருமித் தள்ளி விடுவார்கள்

மிளகுத் தூளின் நெடியை ஆழமாக சுவாசித்து விட்டால் அவ்வளவுதான், கடுமையான இறுமல் ஏற்படும். தலைவலி ஏற்படும்.

மூச்சு விட முடியாது

மூச்சு விட முடியாது

ஆழமாக சுவாசிக்கும்போது மூச்சு விடுவது கடுமையாக பாதிக்கப்படுமாம். மூச்சிறைப்பு ஏற்படும்.

ஆஸ்துமா இருந்தால் ஆபத்து

ஆஸ்துமா இருந்தால் ஆபத்து

ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் இந்த மிளகுத் தூளின் நெடியை அதிகம் நுகர்ந்து விட்டால் மூச்சுத் திணறல் கடுமையாகி விடும் என்கிறார்கள். வயதானவர்களாக இருந்தால் ஆபத்து அதிகம் என்றும் எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

அலர்ஜி ஏற்படும்

அலர்ஜி ஏற்படும்

இதுகுறித்து டாக்டர் நெவின் கிஷோர் என்பவர் கூறுகையில், மிளகுத் தூள் தோல் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆஸ்துமா உள்ளவர்கள் இதை நுகர்ந்தால் நிலை குலைந்து விடுவார்கள்.

நரம்புத் தளர்ச்சி அதிகமாகும்

நரம்புத் தளர்ச்சி அதிகமாகும்

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை, இதய நோய்கள் இருப்பவர்கள் மிளகுதூள் நெடியை நுகர்ந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவஸ்தைப்படுவர்.

கண்ணுக்கும் ஆபத்து

கண்ணுக்கும் ஆபத்து

கண் மருத்துவர் டாக்டர் அருண் சங்கல் கூறுகையில், மிளகுத் தூள் கண்ணில் அதிகம் பட்டு விட்டால் கார்னியாவில் அது தேங்கி நின்று பெரும் சிரமத்தைக் கொடுத்து விடும். இதற்காக நிறைய மருந்துகள் உட்கொள்ள வேண்டி வரும் என்றார்.

பெண்களின் தற்காப்பு கருவி

பெண்களின் தற்காப்பு கருவி

உண்மையில் மிளகுத் தூள் பெண்களுக்குத்தான் நிறைய தேவைப்படும். தனியாக செல்லும்போது தனிமையில் இருக்கும்போது ஆண்களால் ஆபத்து ஏற்படும் சூழல் வந்தால் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள மிளகுத் தூளை பயன்படுத்துவர். இது ஒரு ஆயுதம் போல பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pepper spray, especially when used in a closed space such as Parliament, can lead to temporary blindness, irritation leading to watering of the eyes, persistent cough, breathlessness and wheezing in those suffering from asthma, experts say. The use of pepper spray during the mayhem over the tabling of the Telangana Bill in LS on Thursday triggered breathing diffi culties and coughing among several MPs, some of whom were admitted to hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X