For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் கரையைக் கடந்தது பேய்ட்டி புயல்.. சூறாவளியுடன், பேய் மழை

Google Oneindia Tamil News

Recommended Video

    பேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்

    விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பேய்ட்டி புயல் கரையை கடந்தது. அங்கு பேய் மழை பெய்து வருகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன.

    காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த பேய்ட்டி புயல், பிற்பகலில் காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    Phethai storm crosses the shore today

    புயல் தாக்குதலகால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. பல வீடுகளின் மேற்கூரைகள் சூறை காற்றில் பறந்தன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    தற்போது புயல் தாக்கிய மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

    தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பேய்ட்டி புயல் ஆந்திராவை தாக்கியுள்ளது.

    English summary
    The phethai storm signal in the bay of bengal caused the sea outrage. Security action has been intensified in Andhra Pradesh. National and combat security personnel are ready
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X