For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாங்கோங் திசோ வடக்கில்...கூடுதல் படைகளை குவித்த சீனா... இந்தியாவுக்கு அடுத்த சவால்!!

Google Oneindia Tamil News

லே: கிழக்கு லடாக் பகுதியில் பாங்கோங் திசோ பகுதியின் தெற்கில் சீன ராணுவம் கடந்த வாரம் ஆக்ரமிப்பு செய்ய முயற்சித்தது. இந்த நிலையில் வடக்கில் பிங்கர் 3ல் பொதுவான பகுதியில் சீன ராணுவம் அதிகளவில் படைகளை குவித்து வருவதை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், பிங்கர் 3 பகுதியில் சீன ராணுவத்தினர் கூடுதல் படைகளை குவித்து இருப்பதை அறிந்தவுடன், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

PLA strengthen troops in North Pangong Tso India picks up aircraft survey

இதை அறிந்தவுடன், எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கும் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் அடிக்கடி அந்தப் பகுதியில் பறந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றன. செப்டம்பர் 8-9 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, கூடுதல் வீரர்கள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்திய ராணுவம் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கே விமானங்கள் பறந்தன என்று கூறப்படுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் நாளை சந்தித்துப் பேச இருக்கும் நிலையில் மீண்டும் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே நம்மை சீண்டுவதற்கு சீன ராணுவத்தினர் தயாராகி விட்டனர். ஆனால், நாமும் தயாராக இருக்கிறோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தைலடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை

காட் பாவ் மலைப்பகுதியில் அதிகாரபூர்வ எல்லையைக் கடந்து இந்திய ராணுவத்தினர் சீன ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீனா ராணுவம் நேற்று தெரிவித்து இருந்தது. ஆனால், எல்லையைக் கடந்து ஒருபோதும் இந்தியா துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை. சீனாதான் ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்து இருந்தது.

Recommended Video

    Pangong Tso பகுதியில் கூடுதல் படைகளை குவிக்கும் China

    கடந்த வாரம் மாஸ்கோவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். இருந்தபோதும், எல்லையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்குள் நாள் இருதரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    English summary
    PLA strengthen troops in North Pangong Tso India picks up aircraft survey
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X