For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஏசி கருத்துக்கணிப்பு.. பிரதமர் மோடிக்கு 48% வாக்குகள்.. எதற்கு என்று பாருங்கள் மக்களே!!

தேசிய அளவிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவருக்கான கருத்துக்கணிப்பில்பிரதமர் நரேந்திர மோடி 48 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய அளவில் மக்களிடம் அதிகம் ரீச் ஆகும் தலைவர்கள் குறித்த ஆன்லைன் கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 48 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் ராகுல் காந்தி உள்ளார்.

ஐபிஏசி எனும் இந்திய அரசியல் நடவடிக்கை குழு தேசிய அளவில் அதிகம் ரீச் ஆகும் தலைவருக்கான ஆன்லைன் கருத்துக்கணிப்பை நடத்தியது,

712 மாவட்டங்களில் 57 லட்சத்திற்கும் அதிமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 55 நாட்களில் பிரதமர் மோடி மக்களிடையே அதிகம் ரீச் ஆகும் தலைவர் என்ற கருத்துக்கணிப்பில் முன்னணியில் உள்ளார்.

பிரதமர் முதலிடம்

பிரதமர் முதலிடம்

பிரதமர் மோடி 48 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

ராகுல் 2ஆம் இடம்

ராகுல் 2ஆம் இடம்

இந்த கருத்துக்கணிப்பில் 923 அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 11 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

டெல்லி முதல்வர் 3ஆம் இடம்

டெல்லி முதல்வர் 3ஆம் இடம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9.3 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் 7 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

மமதா 4.2% வாக்குகள்

மமதா 4.2% வாக்குகள்

அவரை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி 4.2 சதவீத வாக்குகளுடன் 5வது இடத்திலும் பிஎஸ்பி கட்சித் தலைவர் மாயாவதி 3.1 சதவீத வாக்குகளுடன் 6வது பிடித்துள்ளார்.

நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருடன், கிஷோர் கடந்த காலத்தில் நெருக்கமாக பணிபுரிந்தார், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, என்.சி.பி. தலைவர் சரத் பவார் மற்றும் பலரும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பிடித்தனர்.

பெண்களுக்கு அதிகாரம்

பெண்களுக்கு அதிகாரம்

நாட்டின் முக்கிய முன்னுரிமைப் பிரச்சினைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாய நெருக்கடி, பொருளாதார சமத்துவமின்மை, மாணவர்களின் பிரச்சினைகள், சுகாதாரம், சுகாதாரம், சுகாதாரம், வகுப்புவாத ஒற்றுமை மற்றும் அடிப்படைக் கல்வி ஆகியவை குறித்தும் இந்த சர்வே நடத்தப்பட்டது.

தோனி வரவேண்டும்

தோனி வரவேண்டும்

அக்ஷய் குமார், ரகுராம் ராஜன், எம்.எஸ். தோனி, யோகி ராம்தேவ் மற்றும் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் போன்றவர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என இந்த சர்வேயில் மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

மோடியே முன்னிலை

மோடியே முன்னிலை

இதேபோன்ற கருத்துக்கணிப்பை கிஷோர் 2013ஆம் ஆண்டும் நடத்தினார். அப்போதும் பிரதமர் மோடி முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM ahead with 48% votes in online poll of I-PAC survey. Modi topped the survey with 48% vote. Congress president Rahul Gandhi came second with 11% vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X