For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓசூர் அருகே ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

By Mathi
Google Oneindia Tamil News

ஆனைக்கல்: பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டதில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டிரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.33 மணியளவில் தடம் புரண்டதில் 8 பேர் பலியாகினர். 87 பேர் படுகாயமடைந்தனர்.

இவ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில், பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன். ரயில்வே அமைச்சரும், அதிகாரிகளும் விபத்து குறித்து கவனித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi tweets that "I Wish the injured a speedy recovery. Railway Minister (Suresh Prabhu) and officials are closely monitoring the situation and ensuring timely relief".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X