For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6வது முறையாக நாளை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்குகிறார்.

நாட்டின் பிரதமராக கடந்த மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்ற சில நாட்களில் பூட்டானுக்கு பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நேபாளம், பிரேசில், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மெற்கொண்டார்.

PM Modi to leave for Myanmar tomorrow

தற்போது 6வது முறையாக நாளை முதல் நவம்பர் 20-ந் தேதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் மோடி. முதலில் மியான்மர் செல்லும் பிரதமர் மோடி, 12வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டிலும் 9வது கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.

பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் பிஜிக்கு பயணம் மேற்கொள்கிறார் மோடி. நவம்பர் 20-ந் தேதியன்று பிஜியில் இருந்து நாடு திரும்பும் அவர், சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்துக்கு செல்ல இருக்கிறார்.

English summary
Prime Minister Narendra Modi is scheduled to leave for Myanmar tomorrow to attend the twelfth ASEAN-India summit on November 12 and the ninth East Asian summit on November 13. It will be the first leg of his three-nation 10-day foreign tour that will also take him to Australia and Fiji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X