சமூக நீதியே நமது குறிக்கோள்... தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் மோடி பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்- வீடியோ

  டெல்லி: சமூக நீதி என்பதே நமது குறிக்கோள், மிஷன் மோடில் செயல்பட்டு நாட்டிற்கு ஆரோக்கியமான சக்தியை கொண்டு வருவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த 2 நாள் மாநாட்டிற்கு முன்னிலை வகிக்கிறார்.

  PM Modi says social justice is only our aim

  எம்பிகள், மத்திய அமைச்சர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், இதன் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களையும் மையமாக வைத்தே இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சியை உருவாக்கும் விதமாக ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற களமாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

  மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது : இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இடம் நம் அரசியல் முன்னோர்களான பண்டித் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் அமர்ந்திருந்த இடம். அவர்கள் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடித்தவர்கள்.

  நாட்டின் எந்த மாவட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. நாம் அவை அனைத்தையும் முன்நோக்கிய என்ற நிலைக்கு கொண்டு வரவேண்டும். சுமித்ரா மஹாஜன் ஆலோசனையின் பேரில் நடக்கும் இந்த மாநாடு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிகள் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்க உதவியாக இருக்கும்.

  நம்மிடம் மனிவளம், திறன், மூலதனம் இருக்கிறது. நாம் அனைவரும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், அதன் மூலம் நாட்டிற்கு ஆரோக்கியமான சக்தியை மாற்றமாக கொண்டு வர முடியும். நம்முடைய இலக்கு சமூக நீதியே.

  திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுமக்கள் பங்களிப்பு எப்போதும் உதவிகரமாக இருக்கிறது. அதிகாரிகளும் மக்களும் வளர்ச்சிக்காக பாடுபடும்போது அதன் முடிவு மிகப்பெரியதாக இருக்கும். நல்ல மாற்றத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

  ஆரோக்கியமான போட்டியும் கூட்டாட்சியும் தான் நாட்டின் பலம். ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சி அளவுகோல்கள் வலுவாக உள்ள சில மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் பிரதமர் பேசினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Modi at National legislators meeting says : We have the manpower, we have the skills and the resources. We need to work in a Mission Mode and bring a positive change. Our aim is social justice

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற