For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்பெல்லாம் மறுபடியும் ஆட்சியை பிடிப்பதே பெரிய விஷயம்தான்.. மோடி

இரு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP's Manohar Lal Khattar to be sworn-in as the Cheif Minister of Haryana on tomorrow.

    டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து நூற்றில் ஒரு வார்த்தை சூப்பராக கூறியுள்ளார் பிரதமர் மோடி.

    இப்போதெல்லாம் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது என்பது பெரிய விஷயம். சிலருக்குத்தான் அந்த பாக்கியத்தை மக்கள் தருகிறார்கள் என்று மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலசட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் மீண்டும் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் ஹரியானாவில்தான் சிக்கல் நிலவுகிறது.

     பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்! பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்!

    வெற்றி

    வெற்றி

    இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து மோடி ஒரு முத்திரை கருத்தை சொல்லியுள்ளார். அவர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றி. வழக்கமாக இதுபோல நடப்பதில்லை. இப்போதெல்லாம் சிலருக்கே மீண்டும் ஆட்சியமைக்கும் பாக்கியத்தை மக்கள் தருகிறார்கள்.

    கடுமையான உழைப்பு

    கடுமையான உழைப்பு

    ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு மீண்டும் ஆட்சியில் நீடிப்பது என்பது இப்போது அருகி விட்டது. அப்படிப்பட்ட நிலையில் இந்த வெற்றி என்பது மிகப் பெரியது. மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸும், ஹரியானா முதல்வர் கட்டாரும் கடுமையாக உழைத்ததால்தான் அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    நிபந்தனைகள்

    நிபந்தனைகள்

    இரு மாநிலங்களிலும் புதியவர்கள்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தனர். மேலும் பிராந்திய ஜாம்பவான்களுடன் கூட்டணி வைத்து ஜூனியர் பார்ட்னராகத்தான் பாஜக இருந்தது. அவர்கள் கொடுத்த சீட்டுகளில்தான் நாங்கள் போட்டியிட நேரிட்டது. அவர்கள் போட்ட நிபந்தனைகளையும் ஏற்க வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட வெற்றி முக்கியமானதுதான், பெரிய வெற்றிதான்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    தேவேந்திர பட்னாவிஸ்

    கடந்த ஐம்பது ஆண்டு மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு முதல்வர் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறை. இதற்காக நான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை பாராட்டுகிறேன். இதுதான் பாஜகவின் சிறப்பு. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என்றார் மோடி.

    English summary
    prime minister narendra modi says that maharashtra, haryana people have reposed trust in CMs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X