For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

26/11 தாக்குதல் நினைவு நாள்: தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவோம்- மோடி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று 26/11 தீவிரவாத தாக்குதல் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த கொடூர தாக்குதல் நடந்து இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

2008ம் ஆண்டு இதே தினத்தில் மும்பையில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதலை நாம் நினைவு கொண்டு அதில் உயிர் இழந்த அப்பாவி ஆண்களுக்கும், பெண்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வீர மரணம் அடைந்த போலீசாருக்கு வீர வணக்கம். அவர்கள் தான் நம் உண்மையான ஹீரோக்கள்.

இந்த நாளில் தீவிரவாதத்தை எதிர்த்து போராட, அதை வேரோடு பிடுங்கி எறிய நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய ஜமாத்துத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் தான் முக்கிய மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது.

English summary
PM Modi tweeted that,'We remember the horrific terror attacks in Mumbai on this day in 2008 & pay homage to the innocent men & women who lost their lives.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X