எங்கெங்கும் கறுப்பு.. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்தார் மோடி!- வீடியோ

  சென்னை : பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.

  இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 10வது பிரம்மாண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான கருத்தரங்கங்களும் இந்த கண்காட்சி அரங்கில நடைபெற்று வருகின்றன.

  PM Narendra Modi today visiting chennai

  ராணுவ கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்துள்ளார்.

  இன்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் விமான நிலையத்தின் உள்ளே இருந்தபடியே ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.

  மாமல்லபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தை சென்றடைந்தார். அங்கு 10வது ராணுவ கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi today visiting Chennai for the inauguration function of Defence Expo 2018 security tigtened up in the city.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற