மோடிக்கு குழந்தை பிறக்கட்டும்.. கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.. - லாலு பிரசாத் யாதவ் பகீர்!
பீகார்: பிரதமர் மோடி குழந்தைப் பெற்றுக்கொள்ள கடவுளிடம் வேண்டுகிறேன் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குடும்ப அரசியல் நடக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் பேச்சுக்கு இன்று பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பதிலளித்திருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடி பேசியதை சுட்டிக்காட்டி, அதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, ''பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும். அவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

குழந்தை
இந்த இருவருக்கும் குழந்தை இல்லாவிட்டால் நான் என்ன செய்ய, நிதீஷ்குமாருக்கு மகன் இருக்கிறார். ஆனால் அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும், அவர்களுக்காக கடவுளிடம் வேண்டத்தான் முடியும்'' என்று கிண்டலாக பதிலளித்திருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறி வருகிறது.

பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் பல இடங்களில் ஒரு கட்சியை ஒரே குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நடத்தி வருகிறார்கள். அப்படி நடத்தப்பட்டால் அங்கு சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும். ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்து ஹரியானா, ஜார்க்கண்ட், உ.பி, தமிழ்நாடு என்று பல மாநிலங்களிலும் குடும்ப அரசியல்தான் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.

குடும்பம்
லாலு பிரசாத் யாதவுக்கு ஒன்பது குழந்தைகள். இவர் பீகாரின் முதல்வராக இரு முறை இருந்துள்ளார். இவரது மனைவி ராஃப்ரி தேவி, இவருக்குப் பின் பீகார் மாநில முதல்வராக இருந்துள்ளார். 2015 பீகார் தேர்தலையடுத்து, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி பீகார் மாநில துணை முதல்வரானார். மற்றொரு மகன் தேஜ் பிரதாப் எம்.எல்.ஏ, மகள் மிஷா பாரதி ராஜ்ய சபா எம்.பி ஆக இருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications