திருப்பதியில் அமலுக்கு வந்த புது சட்டம்.. இனி ஒரு மாசத்துக்கு எதுவுமே பண்ண முடியாது
அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு - 30 அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிகாரத்தை துவங்கினார். இந்த பரிகாரம் அக்டோபர் 2 ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நிறைவடையவுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி துணை முதல்வர் பவன் கல்யாண் அலிபிரி வழியாக பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்து தீட்சையை நிறைவு செய்யவுள்ளார். இதற்கிடையே, திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித்தைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது என்று கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூஜையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக பாத யாத்திரையாகச் சென்று சுவாமி வழிபாடு செய்யவுள்ளார். இந்நிலையில், ஜெகன்மோகன் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் சுவாமி மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே திருமலைக்குள் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் பெரும சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் திருமலையில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30 அக்டோபர் 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications