அரசியல் சுனாமி வருகிறது.... குஜராத்தில் காங். வெல்லும்: ராகுல் அபார நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியல் சுனாமி வருகிறது...ராகுல் காந்தி- வீடியோ

  தாரா: அரசியலில் சுனாமி வந்து கொண்டிருக்கிறது... குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

  ஆட்சி இருக்காது

  ஆட்சி இருக்காது

  குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் தாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

  குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என யாரும் வரலாம். ஆனால் பாஜக அரசு நிச்சயம் இங்கே இ0ருக்கப் போவதில்லை.

  22 ஆண்டுகால பாஜக அரசு

  22 ஆண்டுகால பாஜக அரசு

  கடந்த 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியை காங்கிரஸ் தொண்டர்கள் சகித்துக் கொண்டனர். ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது.

  ஜிஎஸ்டி

  ஜிஎஸ்டி

  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு என்பது கருப்பு பண திருடர்களுக்கு உதவக் கூடிய ஒன்றுதான். ஜிஎஸ்டியை தற்போதைய முறையில் அமல்படுத்தியிருக்கவே கூடாது.

  குஜராத்தில் காங். வெல்லும்

  குஜராத்தில் காங். வெல்லும்

  விரைவில் அரசியல் சுனாமி வர இருக்கிறது. குஜராத்தில் பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெறும்.

  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress Vice President Rahul Gandhi asserted that his party will sweep the Gujarat Assembly elections in December and that a tsunami is coming and the BJP is scared of it.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற