For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: தென் இந்தியாவில் காங்.க்கு அதிக இடம்- தொங்கு நாடாளுமன்றம்-கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் நடத்தப்பட்ட லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் அதே நேரத்தில் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் குறித்து லோக்நிதி- ஐபிஎன் தொலைக்காட்சி பல்வேறு மாநிலங்களில் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது. இதில் நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களான மேற்கு வங்கம், பீகார், ஒடிஷா மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய 7 மாநிலங்களின் கணிப்பின்படி காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் தொங்கு நாடாளுமன்றம்தான் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 7 மாநிலங்களின் மொத்த லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 232. இத் தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என ஐபிஎன் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு விவரம்

Congress

காங்கிரஸுக்கு அதிக இடம்

7 மாநிலங்களின் 232 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 62 இடங்கள் வரை கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 22-40

232 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு 22 முதல் 40 இடங்கள் வரை கிடைக்குமாம்

3வது இடத்தில் திரிணாமுல்

இந்த 7 மாநிலங்களில் 3வதாக மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 28 இடங்கள் வரை கிடைக்குமாம்.

அதிமுகவுக்கு 4வது இடம்

அதிமுகவோ 15 முதல் 23 தொகுதிகளைக் கைப்பற்றி 4வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

விஸ்வரூப ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 11 முதல் 19 இடங்கள் வரை கைப்பற்றுமாம்

தெலுங்குதேசம்

இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் 9 முதல் 15 இடங்கள் வரை கிடைக்குமாம்.

திமுக 7-13

இதன்பின்னர்தான் திமுகவுக்கு இடம். அதாவது 7 முதல் 13 இடங்கள் திமுகவுக்கு கிடைக்குமாம்.

ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி

ஐக்கிய ஜனதா தளம் 7 முதல் 13 இடங்களையும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 6 முதல் 10 இடங்களையும் கைப்பற்றுமாம்.

இடதுசாரிகளுக்கு 9

இந்த 7 மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு 9 முதல் 21 இடங்கள்தான் கிடைக்குமாம்.

தொங்கு நாடாளுமன்றம்

இதனடிப்படையில் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகவே வாய்ப்பு இருக்கிறது என்கிறது இக்கருத்து கணிப்பு

English summary
West Bengal, Bihar and Odisha, Andhra Pradesh, Karnataka, Tamil Nadu and Kerala together account for 232 Lok Sabha seats. If we combine all seven states, no single national party is leading after the first two rounds of the Lokniti-IBN National Tracker poll which covered East and South India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X