நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக் கூடாது என்பதே என் கருத்து: பிரகாஷ்ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நடிகர்கள் என்ற தகுதியால் மட்டுமே அரசியலுக்கு வரக்கூடாது என்பதே என் கருத்து என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்குப் பேரழிவு என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Prakash Raj clarifies his comments on Actor's entry to politics

தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் இருவரையும் குறிப்பிட்டுதான் பிரகாஷ் ராஜ் பேசினாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தாம் பேசியது இதுதான் என ஒரு பதிவை போட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர்கள் என்ற பிரபலத்தை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது. இது பேரழிவு.

நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தெளிவான பார்வை நடிகர்களுக்கு இருக்க வேண்டும். அதேபோல் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

ஒரு ரசிகராக நாம் வாக்களிக்கக் கூடாது. பொறுப்புள்ள குடிமகன்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Prakash Raj said Film actors becoming leaders is a disaster for my country. But he clarify in his twitter page, Actors should not enter into politics only because they are popular. It’s a disaster. This is what I said on ACTORS.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற