For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரசார் பாரதியின் ‘கிரிஷி’... உதயமாகிறது விவசாயிகளுக்கான 24 மணி நேர புதிய சேனல்!

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்குவதற்கான புதிய சேனல் ஒன்றை விரைவில் தொடங்க பிரசார் பாரதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த சேனலுக்கு ‘கிரிஷி' எனப் பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா, பாடல், விளையாட்டு என பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், செய்திகளுக்கும் எனத் தனித்தனியே பல சேனல்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பியதை மட்டும் தேர்வு செய்து பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது.

ஆனால், விவசாயம் தொடர்பான செய்திகளை வழங்குவதற்கு என தனிப்பட்ட சேனல்கள் எதுவும் இதுவரை இல்லை. எனவே, அது போன்ற ஒன்றை ஆரம்பிக்க பிரசார் பாரதி நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

தூர்தர்ஷனின் அனுபவம்...

தூர்தர்ஷனின் அனுபவம்...

வேளாண்மைக்கென்று நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் ஏறகனவே தூர்தர்ஷனுக்கு அதிக அனுபவம் உள்ளது.

கிரிஷி...

கிரிஷி...

இந்த அனுபவத்தைக் கொண்டு 24 மணி நேரமும் ஒளிபரப்பாகக் கூடிய "கிரிஷி' என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்குவதற்கு பிரசார் பாரதி நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.

ஆலோசனை...

ஆலோசனை...

இருப்பினும் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதன்பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வாக்குறுதி...

தேர்தல் வாக்குறுதி...

முன்னதாக, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மைக்கென்று பிராந்திய மொழிகளில் தனி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்று உறுதியளிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Doordarshan could soon launch a channel devoted exclusively to farmers and agriculture with Prasar Bharati actively considering such a proposal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X