For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழைய 500, 1,000 ரூபாய் வைத்திருந்தால் அபராதம்... சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

டெல்லி : பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பிரதமர் மோடி 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அதன்பின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

President Pranab Mukherjee approves Cessation of Liabilities Act 2017

இதனைத்தொடர்ந்து புதிய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது . அதன்படி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10 தாள்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது, அப்படி வைத்திருந்தால் சட்டப்படி குற்றமாகும்.

ஒருவேளை செல்லாது என அறிவித்த பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதனை வைத்திருப்போர் அதன் தொகைக்கு ஏற்ப ஐந்து மடங்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்பதுல் அளித்துள்ளார்.

English summary
Cessation of Liabilities\ Act, 2017, was passed by Parliament last month. The law, signed by President Pranab Mukherjee on February 27, also provides for a minimum fine Rs 50,000 for false declaration by persons who were abroad during the demonetisation period (November 9-December 30, 2016) and given time to deposit such scrapped notes with RBI till March 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X