For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.149 போதும்.. ஆந்திராவின் அசத்தல் திட்டம்.. பெருமூச்சுவிடும் தமிழக மக்கள்!

குறைந்த விலையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்டர்நெட், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி இணைப்பு வழங்கும் சேவையை ஆந்திர மாநில அரசு 2018ல் நிறைவேற்றுகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திராவின் அசத்தல் திட்டம்..தமிழகத்தின் நிலை என்ன?

    ஹைதராபாத் : ஆந்திராவாசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்துக்கொண்டுள்ளது. குறைந்த விலை இண்டர்நெட், தொலைப்பேசி, தொலைகாட்சி மூன்றையும் ஒரே கேபிளில் வழங்கும் திட்டத்தை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

    ஆந்திராவின் ஃபைபர் கிரிட் திட்டம் முதல்கட்டமாக ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று ஆந்திர உட்கட்டமைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 55 கிராமங்களுக்கு ஃபைபர் கிரிட் திட்டத்தின் கீழ் 100 சதவீத இணைப்பு வழங்கத்திட்டமுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

    149 ரூபாய் செலுத்தினால் போதும் மூன்று சேவையும் தடையின்றி அவர்களது வீட்டுக்கு வரப்போகிறது. வரும் புதன்கிழமை அன்று இத்திட்டத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கவுள்ளார்.

    ஃபைபர்கிரிட் திட்டம்

    ஃபைபர்கிரிட் திட்டம்

    2019 ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் வீடுகளுக்கு ஃபைபர் கிரிட் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க திட்டதீட்டப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. "இந்த திட்டத்தின் கீழ் 250 சேனல்களைப்பார்க்கமுடியும், தொலைப்பேசிக்கு வாடகை கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. இந்த திட்டம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது" என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

    பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும்

    பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும்

    இத்திட்டத்தை அமல்படுத்துவன் மூலம் இன்னோரு லாபமும் அரசுக்கு இருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிசிடிவி கேமிராக்களை இணைத்து, ஒரே இடத்தில் பார்க்கமுடியும். இதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தமுடியும் என்கிறது ஆந்திர அரசு.

    மெலிமெடிசின் சேவை

    மெலிமெடிசின் சேவை

    4000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் பள்ளியறைகள் அமைப்பதும், 6 ஆயிரம் தொடக்க சுகாதார மையங்களில் டெலிமெடிசின் சேவையை கொண்டுவருவதிலும் இந்த திட்டம் உதவியாக இருக்கப்போகிறது. ‘கிளவு பேஸ்டு' கற்றல் வகுப்புகள் கட்டமைக்கப்பட்டு, இதன் மூலம் 4 ஆயிரத்து 678 அரசு உயர்நிலைப்பள்ளிகள் பயன்படும் என்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் பெறுமையாக பேசுகிறார்கள்.

    நமக்கு எப்போது?

    நமக்கு எப்போது?

    ஆந்திராவைப்பார்த்து மூக்குமேல் விரல் வைக்கிறார்கள் பக்கத்து மாநிலங்கள். நமக்கு எப்ப இதுமாதிரியான திட்டம் வரும் என்று தமிழக மக்களை பெருமூச்சு விடச்செய்கிறது இந்த திட்டம்.

    English summary
    President Ramnath Kovindh is to inaugurate Andhra's dream Fibre grid project on wednesday which gives internet, tv, telephone services to common man at feasible price
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X