For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் அறிஞர்களுகள் 18 பேருக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: செம்மொழி தமிழ் மற்றும் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்கள் 18 பேருக்கு செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர்களுக்கான விருதுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அந்தவகையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

Presidential Awards for Classical Tamil

இந்த விழாவில் 2013-14, 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில், டாக்டர் கலைக்கோவன், டாக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் டாக்டர் கந்தசாமி ஆகியோருக்கு தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர் கலை செழியன், டாக்டர் கோ.ராஜலட்சுமி, டாக்டர் டி.மகாலட்சுமி, டாக்டர் எஸ்.பி.சாலாவாணிஸ்ரீ, டாக்டர் ஏ.சதீஷ், டாக்டர் முத்துச்செல்வன், டாக்டர் திருஞானசம்பந்தம், டாக்டர் வசந்தகுமாரி, டாக்டர் ஜி.சதீஷ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் வி.பிரகாஷ், டாக்டர் எஸ்.பிரேம்குமார், டாக்டர் ஜி.பாலாஜி, டாக்டர் முனீஷ்மூர்த்தி ஆகிய தமிழ் அறிஞர்களுக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

English summary
presented ‘Presidential Awards for Classical Tamil’ for the year 2013-14, 2014-15 & 2015-16 today at Rashtrapati Bhavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X