Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட.. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை.. மோடி துவங்கிய புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' (மிஷன் லைஃப்) திட்டத்தை குஜராத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், குஜராத் மாநிலத்தின் கெவாடியா பகுதியில் உள்ள 'ஒற்றுமை சிலை' அருகே பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து பேசினார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், கெவாடியா பகுதியில் உள்ள 'ஒற்றுமை சிலை' அருகே பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' (Mission LIFE) திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து உரையாற்றிய அவர், "காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதற்கு இந்த திட்டம் உதவும்" என்று கூறியுள்ளார்.

 பிரதமர் உரை

பிரதமர் உரை

மேலும் அவர் பேசியதாவது, "காலநிலை மாற்றம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. ஆனால் எதிர்மறையாக ஆறுகள் வறண்டு வருகின்றன. காலநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை சார்ந்த பிரச்னை என்றும், அரசுகளோ அல்லது சர்வதேச நிறுவனங்களோ அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் கருதப்பட்டு வந்தன. ஆனால் இது தங்கள் பிரச்னை என்று தற்போது மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். பொது வெளியில் செல்லும் போது சைக்கிளை பயன்படுத்துங்கள். மட்டுமல்லாது நமது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம்." என்று கூறியுள்ளார்.

 பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

உண்மையில் காலநிலை மாற்றம் என்பது உலகிற்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த விஷயங்களை உலக நாடுகள் தற்போது யதார்த்தத்தில் சந்தித்து வருகின்றன. கடந்த கோடைக்காலத்தில் பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக வாட்டியெடுத்த வெயில் காலநிலை மாற்றத்தால்தான் உருவானது என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல கடந்த மாதம் பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையும் காலநிலை மாற்றத்தின் விளைவுதான் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து ஐநா கூறுகையில், "பணக்கார நாடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் வளரும் நாடுகளிடம் பிரதிபலிக்கின்றன" என்று குற்றம்சாட்டியிருந்தது.

 சூரிய ஆற்றல்

சூரிய ஆற்றல்

ஏனெனில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வெளியிடப்படும் கரியமில வாயு உலக வெப்பமயமாதலில் கணிசமாக பங்கு வகிக்கிறது. இது மூன்றாம் தர நாடுகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் பல நாடுகள் புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சூரிய ஆற்றலை பயன்படுத்த தொடங்கியுள்ளன. ஆனால் ரஷ்ய உக்ரைன் போர் காரணமாக இங்கிலாந்து மீண்டும் புதைபடிம எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இவையெல்லவற்றிக்கும் முன்னோடியாக இந்தியா சூரிய ஆற்றலை முழுமையாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.

மாநாடு

மாநாடு

தற்போது குஜராத் வந்துள்ள அன்டோனியோ குட்டரஸ் இந்த கிராமத்தையும் பார்வையிடுகிறார். பின்னர் அங்குள்ள சூரிய கோயிலுக்கும் செல்கிறார். இந்நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கெவாடியாவில் வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10வது தூதரக தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 118 இந்திய தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+