நாடாளுமன்றத்தில் தடுத்தபாஜக எம்பிக்கள்- 'ஜெய்பீம்' என உரத்து முழங்கிய பிரியங்கா காந்தி- பரபர வீடியோ!
டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் தங்களை நுழையவிடாமல் தடுத்து முழக்கங்களை எழுப்பிய பாஜக எம்பிக்களுக்கு பதிலடி தரும் வகையில் அண்ணல் அம்பேத்கரின் முழக்கமான 'ஜெய்பீம்' என்பதை இடைவிடாமல் உரத்து முழங்கினார் காங்கிரஸ் பொதுச்செயலாளரான வயநாடு எம்பி பிரியங்கா காந்தி. பாஜக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்த வீடியோ காட்சிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் பேசியதால் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. நாடாளுமன்ற வளாகமே இன்று போர்க்களமாக மாறியது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை பாஜக மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போட்டி போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களின் போது தள்ளு முள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்தது. இந்தியா கூட்டணி எம்பிக்களை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அம்பேத்கரின் உருவப்படம் ஏந்தியபடி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனாலும் பாஜக எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஜெய்பீம் என அம்பேத்கரின் முழக்கத்தை உரத்து எழுப்பினர். பின்னர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஜெய்பீம் என முழங்கியபடியே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இது தொடர்பான வீடியோக்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பாஜகவினர் இந்தியா கூட்டணி எம்பிக்களை தடுத்து நிறுத்திய இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
इस वीडियो में साफ दिख रहा है..
— Congress (@INCIndia) December 19, 2024
BJP सांसद हाथों में डंडे लगे प्लेकार्ड लेकर विपक्ष के सांसदों को सदन में जाने से रोक रहे हैं।
कांग्रेस अध्यक्ष मल्लिकार्जुन खरगे जी, प्रियंका गांधी जी और अन्य महिला सांसदों के साथ BJP के सांसद धक्का-मुक्की कर रहे हैं।
ये सरासर गुंडई है।… pic.twitter.com/e7azBtgJiq
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications