For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரு வரும் சன்னி லியோனுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு- வீடியோ

    பெங்களூர்: நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் குத்தாட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பெங்களூரில் வரும் டிசம்பர் 31ம் தேதி, இரவு, சன்னி நைட் இன் பெங்களூர் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்று தெரிகிறது.

    சன்னிக்கு எதிர்ப்பு

    சன்னிக்கு எதிர்ப்பு

    இதனிடையே சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் பெங்களூரில் போராட்டங்கள் நடத்திய நிலையில், மேலும் 15 மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

    கலாசாரம் முக்கியம்

    கலாசாரம் முக்கியம்

    இந்த கன்னட அமைப்பின் தலைவர் ஹரீஷ் மற்றும் பொதுச்செயலாளர் சையது மினாஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், சன்னி லியோன் கர்நாடகாவை சேர்ந்தவரோ அல்லது இந்தியாவை சேர்ந்தவரோ கிடையாது. அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரால் கர்நாடக கலாசாரம் கெடுவதை ஏற்க முடியாது.

    டிக்கெட் ரேட்ட வேற ஏத்திட்டாங்க

    டிக்கெட் ரேட்ட வேற ஏத்திட்டாங்க

    சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பயோடெக் நிறுவனங்களுக்குதான் இந்த டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்க கூடியது இல்லை. இதனால் எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சும்மா இருந்தனர்

    சும்மா இருந்தனர்

    சன்னி லியோன் பெங்களூர் வருவது இது முதல் முறை கிடையாது. அப்போதெல்லாம் இதுபோன்ற அமைப்புகள் சும்மா இருந்தன. மேலும் அவர் கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் கவர்ச்சி குயினாக வலம் வந்துள்ளார். அதையும் எதிர்க்கவில்லை. இப்போது திடீரென இந்த அமைப்பு எதிர்க்க நோக்கம் என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

    English summary
    Pro-Kannada group Karnataka Rakshana Vedike Yuva Sene will protest in 15 districts in the state against Sunny Leone's participation in a New Year's Eve party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X