For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை நீக்கிவிட்டு செயற்கை மண்டை ஓடு.. புனே மருத்துவர்கள் சாதனை!

புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புனே: புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார் விபத்தில் அடிபட்டுள்ளது. அப்போது இரண்டு பெரிய ஆபரேஷன்கள் செய்து இவர் உயிர் பிழைக்க வைக்கப்பட்டார்.

Pune doctors done a successful Skull implant operation for the first time

அதன்பின் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சின்ன விரிசல் பெரிதாகி உள்ளது. இதனால் அதை மாற்ற வேண்டும் என்று மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இவருக்கு மண்டை ஓட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்படி இவர் மண்டை ஓட்டில் ஐந்தில் மூன்று பங்கை மாற்றி இருக்கிறார்கள். இதற்காக செயற்கையாக செய்யப்பட்ட மண்டை ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கை மண்டை ஓடு அமெரிக்காவில் செய்யப்பட்டது. இதை அந்த சிறுமியின் மண்டை ஓட்டை எடுத்துவிட்டு பொருத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pune doctors done a successful Skull implant operation for the first time in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X