For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? பாஜக சொல்லும் பகீர் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரசுக்கு ஏன் அக்கறை என பாஜக விளக்கம்

    டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்து தனது மைத்துனர் ராபர்ட் வதேராவிற்கு உதவி செய்தது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    59,000 கோடி மதிப்புள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரபேல் பராமரிப்பு பணிகளை வழங்காமல் ஒரு விமானத்தை கூட உற்பத்தி செய்யாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அது வழங்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    [1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. காங்கிரஸ் பரபரப்பு! ]

    இந்த நிலையில், பதிலடியாக சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவை இந்த விவகாரத்திற்குள் இழுத்துள்ளது பாஜக.

    ராபர்ட் வதேரா நிறுவனம்

    ராபர்ட் வதேரா நிறுவனம்

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான ஆயுத வர்த்தகர் சஞ்சய் பண்டாரி, கடந்த 2008ம் ஆண்டு, ‘ஆப்செட் இந்தியா சொல்யுசன்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். ராணுவ தளவாடங்களை விற்பதற்கும், வாங்குவதற்குமான சேவை வழங்கும் நிறுவனமாக அது செயல்பட தொடங்கியது.

    விருப்பம்

    விருப்பம்

    அதே நேரத்தில், பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரபேல் போர் விமானம் வாங்குவது குறித்து பேசி வந்தது. அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து, டசால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவை வழங்கும் நிறுவனமாக ஆப்செட் இந்தியா சொல்யுசனை ஏற்க வேண்டும் என்று ராபர்ட் வதேரா விரும்பினார்.

    ரத்து செய்த காங்கிரஸ் அரசு

    ரத்து செய்த காங்கிரஸ் அரசு

    எனவே ஆப்செட் இந்தியா சொல்யுசன் நிறுவனத்தை விமான சேவை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளுமாறு டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வற்புறுத்தியது. ஆனால், டசால்ட் அதை ஏற்கவில்லை என்பதால், அந்த பேரத்தையே காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்து விட்டது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    சஞ்சய் பண்டாரியின் நிறுவனத்தை ஏற்காததால்தான், டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தை பழிவாங்க பார்க்கிறது காங்கிரஸ். இந்த ஒப்பந்தத்தை எந்த வகையிலும் செயல்படுத்தவிட மாட்டோம் என்று டசால்ட் ஏவியேசனுக்கு மறைமுகமாக காங்கிரஸ் எச்சரிக்கை தகவல் சொல்கிறது. எதிர்காலத்தில், எந்த சர்வதேச நிறுவனமாக இருந்தாலும், சஞ்சய் பண்டாரி-ராபர்ட் வதேரா நிறுவனம் மூலம் மட்டுமே இந்தியாவில் ஒப்பந்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று நிறுவ காங்கிரஸ் விரும்புகிறது.

    சர்வதேச சதி

    சர்வதேச சதி

    இந்த பின்னணியில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காய்ங்ஸ ஹாலண்டேவுக்கும், ராகுல் காந்திக்கும் நட்பு ஏற்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க இருவரும் இணைந்து திட்டம்போட்டு முயன்று வருகிறார்கள். இந்திய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்துவிட்டு, ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், ராணுவ விமானப்படையின் மனஉறுதியை குலைக்கவும் சதி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    The Bharatiya Janata Party (BJP) on Monday accused Rahul Gandhi of being involved in a “conspiracy, internationally” to sabotage the Rafale deal and benefit his brother-in-law Robert Vadra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X