For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுல் காந்தியை கொன்றுவிட்டேன்.. பத்திரிக்கையாளர்களை ஒரு நிமிடம் குழப்பிய ராகுல்! கடைசியில் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாரத் ஜோடோ யாத்திரை உங்கள் இமேஜை மாற்றியுள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நீங்கள் விரும்பிய படி என்னைப் பற்றி நினைத்துக்கொள்ளலாம். அது உங்களைப் பொறுத்தது. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் எனது பணியை செய்ய வேண்டும் என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாத யாத்திரை 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவிற்குள் சென்றுள்ளது.

இந்திய மக்களே தன்னை வழிபட வேண்டும்.. மோடியின் விருப்பமே இதுதான்.. ராகுல் காந்தி கடும் தாக்கு இந்திய மக்களே தன்னை வழிபட வேண்டும்.. மோடியின் விருப்பமே இதுதான்.. ராகுல் காந்தி கடும் தாக்கு

 ராகுல் காந்தியை கொன்று விட்டேன்

ராகுல் காந்தியை கொன்று விட்டேன்

அரியானாவில் குருஷோத்ரம் பகுதியில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்து கொண்டு இருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் கலகலப்பாகவும் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை உங்கள் இமேஜை (பிம்பம்) மாற்றியுள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தியை கொன்று விட்டேன்" என்று பதிலளித்தார். ராகுலின் இந்த பேச்சை ஒரு நிமிடம் பத்திரிகையாளர்கள் உற்று கவனித்தனர்.

 யாரும் வியப்பு அடைய வேண்டாம்

யாரும் வியப்பு அடைய வேண்டாம்

பத்திரிக்கையாளர்கள் குழப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் உடனே விளக்கம் கொடுத்த ராகுல் காந்தி, நான் கூறியதை கேட்டு யாரும் வியப்பு அடைய வேண்டாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள கடவுள் சிவன் மற்றும் இந்துயிசம் குறித்து வாசியுங்கள். ரொம்ப குழம்பிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தி என்னிடம் இல்லை. பாஜக நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தி என்னிடம் இல்லை.

 எனது பணியை செய்ய வேண்டும்

எனது பணியை செய்ய வேண்டும்

ஏன் ரொம்பவும் குழம்பிக் கொள்கிறீர்கள்? எனது பிம்பத்தை பற்றி நான் கவலைப்படுவதில்லை. நீங்கள் விரும்பிய படி என்னைப் பற்றி நினைத்துக்கொள்ளலாம். அது உங்களைப் பொறுத்தது. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் எனது பணியை செய்ய வேண்டும். ஏன் ரொம்பவும் குழம்புகிறீர்கள்? என்றார். முன்னதாக தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். ராகுல் காந்தி கூறியதாவது:-

பாஜகவால் பொறுக்க முடியாது

பாஜகவால் பொறுக்க முடியாது

நாட்டை ஆட்சி செய்யும் பாஜக மக்களின் வளர்ச்சி குறித்து சிந்திக்காமல் அவர்களை எப்படி பிர்ப்பது என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறது. மக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டால் பாஜகவால் பொறுக்க முடியாது. எனவே வெறுப்பையும் விரோதத்தையும் விதைத்து வருகின்றனர். மக்களை பிரித்தால் மட்டுமே பாஜகவால் அரசியல் செய்ய முடியும். எனவே பாஜக இதை செய்து வருகிறது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது. மக்கள் பாஜகவின் வெறுப்பு அரசியலை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவருக்கும் பொதுவான எதிரி பாஜகதான் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நேரடியாக சந்தித்து பேச முடிகிறது

நேரடியாக சந்தித்து பேச முடிகிறது

பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த யாத்திரை சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் அச்சத்திற்கு எதிரானது. அதுமட்டும் இன்றி இந்த யாத்திரை வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரானதும்கூட. நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே யாத்திரையின் நோக்கம் ஆக உள்ளது. இந்த யாத்திரையில் இதுவரை பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்துள்ளது. நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து பேச முடிகிறது. நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

English summary
Rahul Gandhi meets the media in the midst of the Bharat Jodo Yatra in the state of Haryana. At that time, a journalist asked Rahul Gandhi whether he believed that the Bharat Jodo Yatra had changed his image. To which Rahul Gandhi replied, You can think of me as you like. It depends on you. I don't care about that. He said that I should do my work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X