சீனா விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா, சீனா நடுவே சிக்கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளும் ராணுவம் அத்துமீறுவதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

Rahul questions on Twitter, Why Modi is silent on China issue?

இந்நிலையில், சீன விவகாரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் இருப்பது ஏன்? என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, சீனாவின் அத்துமீறல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? என கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், "இந்தியா-சீனா எல்லையில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக நம்புகிறேன். தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்ற கொள்கையில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது'' என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress Vice-President Rahul Gandhi on Friday questioned the government over the stand-off with China in the Doklam area in Sikkim sector and questioned Prime Minister Narendra Modi's silence on the issue.
Please Wait while comments are loading...