For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்விட்டரில் மோடிக்கு திடீர் டஃப் கொடுக்கும் ராகுல் காந்தி.. வார்த்தைகளில் விளையாடுகிறார்

ட்விட்டரில் கலக்கும் ராகுல்... மோடியை நேரடியாக விளாசுகிறார்

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : சமூக வலைத்தளங்களில் இப்போது எல்லாம் ராகுல் காந்திதான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இப்போது எல்லாம் அவரது ட்வீட்களில் நல்ல மாற்றம் தெரிகிறது. அவரைப் பின் தொடர்பவர்களும் அதிகரித்து இருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்திரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க.,விற்கு சமூக வலைத்தள பிரச்சாரத்திற்கு பிரசாந்த் கிஷோர் வடிவமைத்து தரும் யுக்திகள் குறித்து தெளிவாக விவரித்தார். அதோடு அதில் மோடி எவ்வுளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Rahul's tweets now directly trolling Modi

அதுபோல பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ராகுலின் திருமணம் குறித்த கேள்வி வந்தபோது, 'நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னுடைய 65வது வயதில் என் திருமணம் பற்றிய எந்த ரகசியச்செய்தியும் வராது' என்று மோடியின் திருமண வாழ்க்கை பற்றி மறைமுகமாகக் கிண்டலடித்தார். அப்போதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் அவரது பதிவுகளில் மாற்றம் இருந்தது.

மிகவும் தெளிவாக, அதே சமயம் எதிர்க்கட்சியினரை சாதுர்யமாக அவர் சீண்டிவருகிறார். சில வாரங்களில் அவரது ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி உள்ளது. அதுமட்டுமில்லாமல் குஜராத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவரது ட்வீட்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் நிர்வகிக்கும் அணியைவிட, இவரே தனிப்பட்ட முறையில் இந்த ட்வீட்களைப் போடுகிறார். அதுதான் ஸ்பெஷல். அப்படி சமீபகால அவர் போட்ட ட்வீட்கள் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. அவற்றில் சில :

கடந்த அக்டோபர் 14ம் தேதி, பாகிஸ்தான் தலைவர்களோடு நல்ல புரிதல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்ட ட்விட்டிற்கு பதிலாக, 'மோடி ஜி.. சீக்கிரம் போங்கள்.. ட்ரம்பை கட்டியணைக்க நேரம் வந்துவிட்டது' என்று ட்விட் செய்திருந்தார்.

அக்டோபர் 16ம் தேதி, குஜராத்தில் மோடி பேச இருந்த அன்று, 'அந்தத் தொகுதி மக்களுக்கு இன்று வார்த்தை மழை பொழியப்போகிறது' என்று கிண்டலாக பதிவு செய்திருந்தார். அதே போல அமித் ஷா மகன் நிறுவன விவகாரம் வந்தபோது, 'மோடி நாட்டின் முன்னேற்றத்தைப் பாராமல், அமித் ஷா மகனுக்கு உதவுவதிலேயே குறியாக இருக்கிறார்' என்று ட்வீட் செய்திருந்தார்.

அந்த ஒரு ட்வீட்டிற்கு லைக் செய்தும், ஷேர் செய்தும் மக்கள் பலத்த ஆதரவைக்காட்டினார்கள். தற்போது ரந்தீப்சிங் சுரஜ்வாலா மற்றும் திவ்யா ஷ்பந்தனா ஆகியோர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை நிர்வகிக்க ராகுல் காந்தியால் நேரடியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் காங்கிரஸ் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்து வரும் பாரதிய ஜனதா கட்சியினர் ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கையால் கவலையடைந்துள்ளனர்.

அதுபோல் இன்றும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக ராகுல் போட்டிருக்கும் ட்வீட்டில், மோடியைக் குறிப்பிட்ட தமிழ் மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் சினிமாவிற்கு தடை சொல்லாதீர்கள்' என்று ட்வீட்டி இருக்கிறார். தற்போது அது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

English summary
Rahul's tweets are now getting more famous. His tweets directly trolls modi and BJP. In a short span of time he is winning many followers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X