ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்- ராகுல் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்

  சிங்கப்பூர்: ராஜீவ் கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம் ென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

  5 நாட்கள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

  அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார். அதில் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா என்று ஒரு மாணவர் கேட்டார்.

  கோபத்தில் இருந்தோம்

  கோபத்தில் இருந்தோம்

  அதற்கு ராகுல் காந்தி, எனது தந்தை மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்தோம். பல ஆண்டுகளாக கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம்.

  மன்னித்துவிட்டேம்

  மன்னித்துவிட்டேம்

  ஆனால் தற்போது எப்படியோ கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். ஒரு விஷயம் தன் வாழ்க்கையில் நடைபெறும் போதுதான் அதை உணரமுடியும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை டிவியில் பார்த்தபோது இரு விஷயங்களை நினைத்தேன்.

  குடும்பம் உள்ளது

  குடும்பம் உள்ளது

  ஒன்று இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர், மற்றொன்று அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். வன்முறையை தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன்.

  மரணம் நிச்சயம்

  எனது தந்தை இறக்க போகிறார் என்பதும் எனது பாட்டி இறக்க போகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். அரசியலில் எதற்காகவாவது போராடினால் மரணம் நிச்சயம் என்பது எனக்கு தெரியும்.

  பாட்மிண்டன் விளையாடினேன்

  பாட்மிண்டன் விளையாடினேன்

  நான் 14 வயதாக இருக்கும்போது எனது பாட்டி இந்திரா படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளிகளுடன் நான் பேட்மிண்டன் விளையாடியுள்ளேன். எனது தந்தை மரணத்துக்கு பிறகு எனது வாழும் சூழலே மாறிவிட்டது. 24 மணி நேரமும் 15 பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress president Rahul Gandhi on Saturday said that he and his sister Priyanka Gandhi have “completely forgiven” his father Rajiv Gandhi’s killers.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற