For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு ‘சீட்’ கிடையாது: ராகுல்

By Mathi
|

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்' கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலம் திபுவில் 9 சுயாட்சி கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு சீட் கொடுப்பதை நான் விரும்பவில்லை. இப்படி சீட் கொடுக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்று கருதுகிறேன்.

Rahul vows to bring reforms in Cong

தங்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். அதற்காக, வேட்பாளர்களை அவர்களே முடிவு செய்ய வேண்டும். வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை நான் தொடங்கி உள்ளேன்.

கவுகாத்தி உள்பட 16 லோக்சபா தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை பொதுமக்களே தேர்வு செய்வார்கள். அதிகாரம் குவிக்கப்பட வேண்டும், டெல்லியில் இருந்தே எல்லாமும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்படுகிறது.

அதிகாரம், கீழ்மட்ட அளவில் பரவலாக்கப்பட வேண்டும் என்று மற்றொரு யோசனை கூறப்படுகிறது. இந்த இரண்டாவது யோசனையைத்தான் நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

English summary
Congress Vice president Rahul Gandhi said party workers only will choose Lok Sabha candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X