For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு மிட்டல் குழு பரிந்துரைத்துள்ளது.

ரயில்வே துறை க்கு வருமானங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பி்ல் டி.கே. மிட்டல் குழு கடந்த மாதம் 4-ந் தேதி அமைக்கப்பட்டது.

Rail panel favours fare hike

இக்குழு தமது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்:

  • புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்திக்கொள்ளலாம்.
  • இக் கட்டண உயர்வும் ஒவ்வொரு 2 மாதத்திற்கு ஒரு முறை கி.மீ ஒன்றுக்கு 2 பைசா வீதம் உயர்த்திக் கொள்ளலாம்.
  • ரயில்வே நிர்வாகம் குறைந்தபட்ச தூரமான 10கி,.மீ என்பதை 20கி.மீ ஆகவும் எக்ஸ்பிரஸ் ரயி்ல்களின் குறைந்தபட்ச தூரத்தை 50கி.மீலிருந்து 100 கி.மீ., ஆகவும் அதிகரிக்க வேண்டும்.
  • சாலைப் போக்குவரத்தை ஒப்பிடுகையில் புறநகர் ரயில் கட்டணங்கள் 60% குறைவாக உள்ளது. சாலைபோக்குவரத்து இணையாக கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறை வருமானங்களை பெற முடியும்.

இவ்வாறு மிட்டல் குழு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A hike in passenger train fares, particularly in suburban services, and an increase in the minimum distance to be covered by passenger and express trains are among the recommendations made by an official committee in its report submitted to the railways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X