For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறங்க வேண்டிய இடம் வரும்போது பயணிகளை எஸ்.எம்.எஸ். அனுப்பி ரயில்வே எழுப்பும்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வரும்போது அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அலர்ட் மெசேஜ் அனுப்பும் வசதியை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா அறிவித்துள்ளார்.

இன்று கெளடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை நெருங்கும்போது அவர்களுக்கு அலர்ட் செய்தி எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் தூக்கத்தில் பயணிகள் இருந்தால் கூட தாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பே எழும்பி தயாராகும் வாய்ப்பு உருவாகும்.

Railway to send SMS alerts to passengers of their destinations

இதுபோக ரயில் பயணிகளுக்காக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ள சில சலுகைகள்:

ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்பதை ஆன்லைனில் நேரடியாக அறிய வசதி செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்ப்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

ரயிலில் பயணத்தின்போது கேன்டீனுக்குப் போய் உணவு வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மாறாக, உணவை எஸ்எம்எஸ் மூலமே ஆர்டர் செய்யலாம். ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் செய்ய ஐவிஆர்எஸ் போன் லைன்கள் உருவாக்கப்படும்.

ரயில்களில் பயணிகளுக்கு ஆர். ஓ மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும். ஏசி, முதல் வகுப்பு படுக்கைகள், தலையணை உறைகளை துவைக்க இயந்திர லாண்டரிகள் பயன்படுத்தப்படும்.-முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள், பார்க்கிங் டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்.

English summary
Railway will introduce a new SMS service to alert the passengers when they approach their destinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X