For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடை மழையால் ஆபீசுக்கு லேட்.. டிராபிக் நெரிசலில் சிக்கி பெங்களூர்வாசிகள் புலம்பல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் காலை முதல் பெய்த அடை மழை காரணமாக நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அலுவலகங்களுக்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக ஊழியர்கள் சென்றடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு கடலோர கர்நாடக பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பருவமழை தாக்கம் பெங்களூரையும் விட்டு வைக்கவில்லை. காலை முதல் விடாமல் பெய்த அடை மழை காரணமாக, வழக்கமாகவே, டிராபிக் ஜாம் காரணமாக விழிபிதுங்கும் பெங்களூர், இன்று பெரும் பாடுபட்டது.

Rain causes traffic jam reported across Bengaluru

பன்னேருகட்டா ரோடு, ஒசூர் ரோடு, எம்ஜிரோடு, ராஜாஜிநகர், பனசங்கரி, விஜயநகர், ஜெயநகர், யஷ்வந்தபுர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

5 கி.மீ தூரத்தை கடக்கவே 2 மணி நேரம் ஆனது. மழையில் நனைந்தபடியே சாலையில் நிற்க முடியதா காரணத்தால், பலரும் பாதியிலேயே வீடு திரும்பி ஆபீஸ்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டனர். சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆப்ஷனை எடுத்துக்கொண்டதையும் அறிய முடிந்தது.

குப்பை லாரிகள் உரிய நேரத்திற்கு வர முடியாததால் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கின. பள்ளி மாணவ, மாணவிகளும், உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு சென்று சேர முடியவில்லை. மாலையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆபீஸ் சென்றோர் டென்ஷனாக உள்ளனர்.

English summary
Traffic jam reported across Bengaluru as rain lashes from the early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X