For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் பேய் மழை.. பூசாரி உட்பட 3 பேர் பரிதாப பலி.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய்-மகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரில் பேய் மழை.. 3 பேர் பலி-வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் பெய்த கன மழையில் சிக்கி கோயில் பூசாரி மற்றும் தம்பதிகள் பலியான நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகளை தேடும் பணி நீடிக்கிறது.

    பெங்களூரில் பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், மாலை 6 மணிக்கு மேல் தினமும் மழை பெய்கிறது. நேற்றும் இதுபோல கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு பெங்களூரில் மழை அளவு அதிகமாக இருந்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நேரம் டிராபிக் ஜாம் ஆனது.

    கணவன்-மனைவி பரிதாபம்

    கணவன்-மனைவி பரிதாபம்

    பெங்களூர் குருபரஹள்ளி பகுதியை சேர்ந்த சங்கரப்பா (50) மற்றும் அவர் மனைவி கமலம்மா (42) ஆகியோர் வீட்டு காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தனர். மழை பெய்துகொண்டிருந்தபோது, வெள்ள நீர் வீட்டுக்குள் வந்ததால், அவர்கள் மாடிக்கு கிளம்பியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே அவர்கள் வந்த நேரத்தில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பூசாரி

    இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில், கோயில் பூசாரி வாசுதேவ் (45) என்பவர், சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான தண்ணீர் கால்வாயில் ஓடிக்கொண்டிருந்ததால், கால்வாய் சுற்றுச்சுவர் இடிந்து அந்த வழியாக நடந்து சென்ற வாசுதேவை அடித்துச் சென்றது. சம்பவம் நடந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் இன்று காலை வாசுதேவ் உடல் மீட்கப்பட்டது.

    தாய்-மகள் மாயம்

    இதேபோல நந்தினி லேஅவுட், லக்கரே பகுதியில் மீனாட்சி என்ற 57 வயது பெண்மணியும், புஷ்பா என்ற அவரது 22 வயது மகளும் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி சனிக்கிழமையும் தொடர்ந்து நடந்து வருகிறது. குருபரஹள்ளி பகுதியில் 12க்கும் மேற்பட்ட சமையல் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    மேயர் பார்வையிட்டார்

    மேயர் பார்வையிட்டார்

    நேற்று இரவு பெங்களூரின் சில பகுதிகளில் 8 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக கர்நாடக மாநில பேரிிடர் மீட்பு குழு தெரிவிக்கிறது. சேதங்களை பெங்களூர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் சம்பத்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இதனிடையே பெங்களூரில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    English summary
    Three people were killed and two others were washed away and feared dead, as heavy rain pummelled an already-bruised Bengaluru on Friday evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X