எக்காரணம் கொண்டும் ரேஷன் பொருட்களின் விலை உயர்த்தப்படாது... மத்திய அரசு உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: எக்காரணம் கொண்டும் ரேஷன் பொருட்களின் விலை உயர்த்தப்படாது என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். பழையே விலையே மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு பழைய மானிய விலையிலேயே உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Ram Vilas Paswan has asked all states to follow the reservation policy in allotment of ration shops

ரேஷன் பொருட்களை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில்தான் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் இதனை தெரிவித்துள்ளார். மானிய விலையில் வழங்கும் அரிசி கோதுமையால் நாடு முழுவதும் 80 கோடி பயன்பெறுவதாகவும் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். இதற்காக ஆண்டும் 1.4லட்சம் கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்குவதகாவும் அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union food minister Ram Vilas Paswan has asked all states to follow the reservation policy in allotment of ration shops and ensure priority is accorded to members of SC and ST categories.
Please Wait while comments are loading...