For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு.. 71 ரூபாய் ஆனது!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71 ரூபாய் ஆகியுள்ளது.

இன்று அதிகாலையே ரூபாய் மதிப்பில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது.

Reaches very Low: Indian Rupee now at 70.96 versus the US dollar

இந்தியாவின் பொருளாதாரத்தில் இது பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

10 நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. நேற்று 70.82 ரூபாய் ஆனது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் 14 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் இன்று காலை மீண்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 0.04 பைசா குறைந்தது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71 ரூபாயை தொட்டுள்ளது.

இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இதனால் இந்தியாவின் வளர்ச்சி பெரிய பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.

English summary
Reaches very Low: Indian Rupee now at 70.96 versus the US dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X