For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரகாட்டம்... நாதஸ்வர கச்சேரியுடன் டெல்லியில் அணிவகுத்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கரகாட்டம் மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் தமிழகத்தின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது மாநிலங்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற அலங்கார வாகன அணிவகுப்பில் கரகாட்டம் மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் தமிழக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வாகனம் இடம்பெற்றது.

நாடு முழுவதும் 68வது குடியரசு நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடியை ஏற்றிவைத்து ராணுவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் டெல்லி, கோவா,ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அவர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தம் வகையில் இடம் பெற்றன.

தமிழகத்தின் சார்பில் இடம்பெற்ற அலங்கார வாகனத்தில் நாட்டுப்புற கலையான கரகாட்டம் நாதவஸ்வர கச்சேரியுடன் இடம்பெற்றிருந்தது. மேலும் காளி, அம்மன் போன்ற கடவுள்களின் உருவச்சிலைகளும் இடம்பெற்றிருந்தது. தமிழக அலங்கார ஊர்தியில் ஜல்லிக்கட்டு இடம்பெறும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழக அரசு அப்படி செய்யாமல் விட்டுவிட்டது.

இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் உட்பட அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பார்த்து ரசித்தனர். எராளமான பொதுமக்களும் பெரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

English summary
Republic Day parade in New Delhi, the state's heritage held in tableau rally. Karakattam and the State of the concert natasvara rallied in the tableau rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X