சிறையில் சசிகலா விதிமீறல்.. அம்பலப்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிக்கு அதிரடி டிரான்ஸ்பர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், சிறைக்குள் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை டிஜிபிக்கு அறிக்கையனுப்பினார் ரூபா.

Roopa who exposed rot in Bengaluru Central Prison transferred

இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. ரூபாவும் பின்னர் நிருபர்களை சந்தித்து அறிக்கையிலுள்ள அம்சங்கள் உண்மைதான் என பேட்டியளித்தார். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரூபா டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணி விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்ததற்காக கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சத்யநாராயணராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Karnataka government on Monday transferred D Roopa who as DIG prisons had filed a damning report on Bengaluru Central Jail. ADGP Prisons, H N Sathyanarayana Rao who was accused of corruption has also been transferred.
Please Wait while comments are loading...