For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... ரூ1,100 கோடியை விளம்பரத்துக்கு கொட்டிய மோடி அரசு! 2 மங்கள்யானை ஏவியிருக்கலாம்!!

மத்திய பாஜக அரசு ரூ1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ1,100 கோடியை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராம்வீர் சிங் அனுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பிய பதில் கடிதத்தில், 2014-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை டிவி, இணையம் மற்றும் இதர எலக்ட்ரானிக் மீடியாக்கள் மூலமாக விளம்பரம் செய்ய ரூ1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. நாளிதழ்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

Rs 1100 crore... Modis ads cost!

அதாவது நாளொன்றுக்கு ரூ1.4 கோடியை மத்திய அரசு டிவி, இணையம் மற்றும் எலக்ட்ரானி மீடியா விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தை உருவாக்க ரூ450 கோடிதான் செலவானது என பெருமையாக கூறியவர் மோடி.

ஆனால் அதைப் போல 2 மடங்கு விளம்பரத்துக்காக மோடி அரசு செலவிட்டுள்ளது. மோடி அரசின் விளம்பர செலவில் 2 மங்கள்யானை விண்ணில் ஏவியிருக்கலாம்.

இதே மத்திய பாஜக அரசுதான் டெல்லி ஆம் ஆத்மி அரசு, விளம்பரங்களுக்காக ரூ526 கோடி செலவிட்டதை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் முகமது சலீம், இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா என்ற எமர்ஜென்சி கால முழக்கங்கள்தான் மோடி அரசின் நடவடிக்கையை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. மோடி அரசு தம்முடைய தவறுகளை மக்களிடம் இருந்து மறைக்கவும் மறக்க வைக்கவும் இத்தகைய விளம்பரங்களை செய்வதாக சாடியுள்ளார்.

English summary
The Centre has spent over Rs 1,100 crore on advertisements a RIght to Information query revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X