டென்சனான சஞ்சு சாம்சன்... ரசிகர்களை ஏமாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்... அணிக்குள் நடப்பது மோதலா? பிராங்கா?
ஜெய்பூர்: ட்விட்டரில் எல்லைமீறி நையாண்டி பதிவுகளை வெளியிட்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் சமூக வலைதள குழுவை மாற்ற அணி முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான நிலையில் அனைத்தும் பிராங்க் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சாஹல், ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டர் அட்மினுடன் சேர்ந்து சேட்டைகளில் ஈடுபட்டது வைரலானது.
அதில் ராஜஸ்தான் ராயல்ஸின் புதிய கேட்பன் யுஜ்வேந்திர சஹால் என விளையாட்டாக வெளியிட்ட பதிவை உண்மை என நம்பி பல ஊடகங்களும் செய்தியாக்கின.

எடிட் செய்யப்பட்ட சாம்சன் புகைப்படம்
நேற்று மதியம் ராஜஸ்தான் ராயல் அணியின் ட்விட்டர் கணக்கில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் படத்திற்கு தோடு, டர்பன், கண்ணாடி வைத்து புகைப்படம் ஒன்று வெளியானது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் அந்த படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் ட்விட்டரில் அதிகளவில் ரீடுவீட் செய்திருந்தனர்.

சஞ்சு சாம்சன் கோபம்
பலரையும் சிரிக்க வைத்த இந்த படம் சஞ்சு சாம்சனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. தனக்கு அவமரியாதை செய்யும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள குழு இந்த படத்தை பதிவிட்டதாக அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் முறையிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. சர்ச்சைக்குரிய அந்த பதிவை ட்விட்டரில் ரீடுவீட் செய்துள்ள அவர், "நண்பர்களுக்குள் இது போல் செய்வது பரவாயில்லை, ஆனால் அணிகள் தொழில் நேர்த்தியுடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும் அவர் UNFOLLOW செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணி அறிக்கை
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் பதிவை நீக்கியது. இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் குற்றச்சாட்டை அடுத்து அந்த படத்தை பதிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸின் சமூக வலைதள மேலாளரை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காகு காரணம், அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை. அதில், "இன்றைய நிகழ்வுகளை தொடர்ந்து அணியின் சமூக வலைதள பிரிவில் மாற்றம் செய்ய இருக்கிறோம். அணி வீரர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அனைவரும் ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர்.

சமூக வலைதள அணியை மாற்றப்போகிறோம்
அணி நிர்வாகம் ஒட்டுமொத்த சமூக வலைதள செயல்பாட்டை ஆராய்ந்து திட்டங்களில் மாறுதல் செய்த புதிய சமூக வலைதள பிரிவை அமைக்க இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் நமது ரசிகர்கள் தொடர்ச்சியாக அணி குறித்த தகவல்களை எதிர்பார்ப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இதற்காக தற்காலிக தீர்வுகளையும் அலசி ஆராய்ந்து வருகிறோம்." எனக் குறிப்பிட்டு இருக்கிறது.

எல்லாமே பிராங்கா?
இதை உண்மை என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் விவாதித்துக் கொண்டிருக்க அனைத்தும் பிராங்க் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த அணியின் ட்விட்டரில் கணக்கில் மேலும் 2 வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. முதல் வீடியோவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒவ்வொரு வீரரிடம் கெஞ்சுவதை போன்றும் 2 வது வீடியோவில் புதிய அட்மினுக்கான நேர்காணல் நடப்பது போன்று நகைச்சுவையாக வீடியோவை அந்த அணி வெளியிட்டு இருக்கிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications